Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியலை விட்டு மோடி விலகினால் நானும் வெளியேறி விடுவேன்

பிப்ரவரி 04, 2019 09:26

புனே: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி புனேவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பார்வையாளர்கள் கேட்ட கேள்விக்கு ஸ்மிரிதி இரானி பதில் அளித்து பேசியதாவது: நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, இவ்வளவு பெரிய பணிகளில் ஈடுபடுவேன் என்றோ ஒருபோதும் நினைத்தது இல்லை. புகழ்பெற்ற தலைவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஏற்கனவே மாபெரும் தலைவர் வாஜ்பாயுடன் பணியாற்றினேன். தற்போது பிரதமர் மோடியுடன் பணியாற்றுகிறேன். பிரதமர் மோடி நீண்ட காலம் அரசியலில் இருப்பார். அவர் அரசியலை விட்டு விலகிவிட்டால் நானும் இந்திய அரசியலில் இருக்க மாட்டேன். நான் எனது வாழ்க்கையை நாட்டுக்காக இந்த சமூகத்துகாக ஒப்படைத்திருக்கிறேன். 

கட்சியும், கட்சித்தலைவர் அமித் ஷாவும் முடிவெடுத்தால் மீண்டும் நான் அமேதி தொகுதியில் போட்டியிடுவேன். பெண்கள் அரசியலில் காலூன்றுவது என்பது கடினமான வி‌ஷயம். மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், தற்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றவர்கள் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்கள். அவர்களின் வழியில் நானும் பயணித்து வருகிறேன் என அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்