Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் தினமும் 5 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனை

ஆகஸ்டு 14, 2021 05:20

திருவனந்தபுரம்: இந்தியாவில் அதிக அளவில் மது விற்பனை நடக்கும் மாநிலமாக கேரளா உள்ளது. மேலும் கேரளாவில் ஆண்டுதோறும் மதுபான விற்பனை அதிகரித்து வருகிறது. இங்கு கேரள அரசுக்கு சொந்தமான அரசு மதுபான கழகம், மதுபான கடைகளை நடத்தி வருகிறது. மேலும் நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பிலும் மதுபான கடைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் மதுபான கடைகள் மூடப்பட்டன. பின்னர் கடந்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் மட்டும் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு பார்சல் சேவைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் மதுபான விபரம் குறித்து கொச்சியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விபரம் கோரி இருந்தார். அதற்கு அளிக்கப்பட்டப்பட்ட பதிலில் கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவில் 94.22 கோடி லிட்டர் மதுபானம் விற்பனையானது.

இதுபோல் ஒயின், பீர் உள்ளிட்ட மதுபான வகைகள் சராசரியாக தினமும் 5 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. ஆனால் இந்த மது விற்பனையால் கேரள அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது? என்ற தகவல் அளிக்கப்படவில்லை. ஆனால் கடந்த 2016-2017ம் ஆண்டு மது விற்பனை மூலம் அரசுக்கு 85.93 கோடி ரூபாயும், 2017-2018ம் ஆண்டில் 100.54 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்