Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 ஏற்காட்டில் 6 பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன

ஆகஸ்டு 26, 2021 02:27

ஏற்காடு: கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து 4 மாத இடைவெளிக்கு பின்னர் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு ஏராளாமானோர் வந்தனர். அவர்களை முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டது. உயிரியல் பூங்கா இயக்குனர் சுப்ரமணியம் மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
இதேபோல் ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி, ஏற்காடு மான் பூங்கா, கரடியூர் சுற்றுலா மையங்களிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஏற்காடு தோட்டக்கலைத்துறை பூங்காக்களான அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் பூங்கா, ஐந்தினை பூங்கா, 2 தாவரவியல் பூங்காக்கள் என 6 பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன.

பூங்காக்கள் திறக்கப்பட்டதால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆங்கங்கே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பூங்காக்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

பூங்காக்கள் திறக்கப்பட்டாலும் ஏற்காடு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. கொரோனா தடுப்பூசி 2 தவணை போட்டவர்கள் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏற்காட்டுக்கு அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் ஏற்காடு பகுதிகளில் வசிப்பவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்காடு செல்லும் சாலைகளில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்