Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டிஜிபிக்களை மாநில அரசு தங்கள் இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது

ஜனவரி 16, 2019 07:14

புதுடெல்லி: மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துவதாகவும், இதனால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறு கேட்டு பிரகாஷ் சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்  டிஜிபிக்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும் என்றும், யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. 

மேலும் இடைக்கால டிஜிபியாக யாரையும் நியமனம் செய்யக் கூடாது என்றும் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகளை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து  மாநில டிஜிபிக்களை அந்தந்த மாநில தேர்வுக்குழுவே தேர்வு செய்து நியமிக்க அனுமதி கோரி கேரளா, பஞ்சாப், அரியானா உள்பட 5 மாநிலங்கள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை  இன்று வந்த போது 5 மாநிலங்களின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

தலைப்புச்செய்திகள்