Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோமதிக்கு ரூ.15 லட்சம்: அதிமுக

ஏப்ரல் 30, 2019 06:15

சென்னை: ஆசிய தடகள விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளனர். வெள்ளி பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜூவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோமதிக்கு ஏற்கனவே தி.மு.க., சார்பில் ரூ.10 லட்சம் பரிசு தொகையை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வழங்கினார். காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோமதிக்கு நடிகர் விஜயசேதுபதியும் உதவி தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்