Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் நீதி மையத்துக்கு வாக்கு வங்கி கூடியதா?

ஏப்ரல் 30, 2019 10:29

சென்னை: கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் தேர்தல் நடந்தது.இதில் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் புதிய வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.

இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களான கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத தேர்தல் என்பதாலும் புதிய கட்சிகள் நிறைய உதயமாகி இருப்பதாலும் இந்த தேர்தலில் யாருக்கு புதிய வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பதை பொறுத்தே தேர்தல் முடிவுகள் வரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதில் அதிமுகவின் வாக்குகளை தினகரனின் அமமுக கட்சி சிதறடிக்கும் என்றும், புதிய வாக்காளர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும், கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் அதிகமாக வாக்களித்ததாக தேர்தலுக்கு பிந்தைய தகவல் வருகின்றன. 

இதனால் தேர்தலுக்கு முன்பு இந்த இரண்டு கட்சிக்கும் கிடைக்கும் வாக்குகளை விட அதிகாகமாக வரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மே 19 ஆம் தேதி நடக்கவிருக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சீமானும், கமலும் உள்ளனர். 

இவர்களின் வருகையால் இவர்களுக்கு விழும் வாக்குகள் எந்த கட்சியின் வெற்றியை பறிக்கும் என்பது மே 23ஆம் தேதிக்கு பிறகு தெரியும் என்றும் கூறிவருகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

சீமான் மற்றும் கமல் பிரச்சாரத்தின் போது இளைஞர்கள் அதிகளவில் இருந்ததும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கின்றன.

தலைப்புச்செய்திகள்