Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுவையில் இன்று பள்ளிகள் திறப்பு- அச்சமின்றி, மகிழ்ச்சியோடு வாருங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

செப்டம்பர் 01, 2021 11:22

புதுவை: தமிழகத்தைப் போல் புதுச்சேரியி லும் இன்று 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அச்சத்துடன் பள்ளிக்கு செல்ல வேண்டாம். மகிழ்ச்சியோடு செல்லுங்கள். எச்சரிக்கையோடு இருங்கள் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு காணொலியில் கூறியிருப்பதாவது:

ஒன்றரை ஆண்டுகள் கழித்து பள்ளிக்கு செல்ல உள்ளோம். பள்ளிக்கு செல்லும்போது பயத்துடன் செல்ல வேண்டாம். மகிழ்ச் சியோடு செல்ல வேண்டும். கரோனா தாக்கிவிடுமோ என்ற அச்சம் வேண்டாம். ஆனால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பள்ளிக்குச் சென்றால் தோழிகளையோ, தோழர்களையோ பார்க்கும்போது நேராக சென்று கைகொடுப்பதும், கட்டி அணைப் பதும் போல் இல்லாமல், தூரத்தில் இருந்தபடியே நாம் அவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொள்ள வேண்டும்.

சரியான இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்துகொண்டு தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். எப்போதும் முகக்கவசத்தை கழற்ற வேண் டாம். சாப்பிடும்போதும், தண்ணீர் குடிக்கும்போது மட்டும் தான் முகக்கவசத்தை கழற்ற வேண்டும். சாப்பிடும்போது கூட நேர் எதிரே அமர்ந்து சாப்பிடக்கூடாது. நேராக உட்கார்ந்து சாப்பிடும்போது தான் கரோனா பரவும். ஆகவே திரும்பி உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். அதேபோன்று கைகளை நன்றாக கழுவ வேண்டும். சானிடைசர் இருந்தால் அதனையும் போட்டுக்கொள்ளலாம்.

ஒருவேலை சளியோ, காய்ச்சலோ இருந்தால், உடனே ஆசிரி யர்களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்து பள்ளிக்கு செல்வதில் இருந்து விலகி இருக்கலாம்.
எச்சரிக்கையாக இருந்தால் நாம் எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்கலாம், பள்ளிக்கு போகலாம்.தோழிகள், தொழர்களை பார்க் கலாம், ஆசிரியர்களிடம் சந்தே கம் கேட்கலாம். ஆகவே எச்ச ரிக்கையுடன் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்லுங்கள். அனை வருக்கும் என்னுடைய வாழ்த் துக்கள்.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்