Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

செப்டம்பர் 01, 2021 11:32

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பிளவக்கல் பெரியார், மற்றும் கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் பெரியார் அணையின் முழு கொள்ளளவு 47.56 அடியாகும். கோவிலாறு அணையின் முழு கொள்ளளவு 42.64 அடி ஆகும். இந்த 2 அணைகளுக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழை முக்கிய நீராதாரமாக உள்ளது. அங்கு பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து சேருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அந்த மழையின் காரணமாக பிளவக்கல் பெரியார், கோவிலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளவக்கல் பெரியார் அணையின் நீர்மட்டம் 29 அடியாக இருந்தது. நேற்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 29.27 அடியாக உயர்ந்தது. கோவிலாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்தது. தற்போது மழை பெய்ததில் நீர்வரத்து அதிகரித்து 27.17 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் 2 அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளதால் அதை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது விவசாயிகள் நெல்நடவு செய்வதற்காக ஆயத்த பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்