Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓபிஎஸ் மனைவி மறைவு- நேரில் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்

செப்டம்பர் 01, 2021 03:49

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், மனைவியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

முன்னதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தலைப்புச்செய்திகள்