Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா பாசிட்டிவ்

செப்டம்பர் 01, 2021 03:57

கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் 32 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளி, கல்லூரிகளை திறக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் யோசித்து வந்தன. ஆனால் இந்த முறையும் கல்லூரிகள், பள்ளிகளை திறக்காவிடில் மாணவர்களின் செயல்திறன் குறைந்துவிடும் என்பதால், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கல்லூரி, பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் முடிவு செய்தன.

கல்லூரிகள் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 3-வது அலை தொடங்கிவிட்டது என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடகாவின் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில் ‘பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகளும் கேரளாவில் இருந்து திரும்பியவர்கள். நான் கல்லூரி சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன். கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்