Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்கான் நிறுவனர் பிரபுபாதா நினைவாக 125 ரூபாய் நாணயம் வெளியீடு

செப்டம்பர் 02, 2021 10:31

புதுடெல்லி: பகவான் கிருஷ்ணரின் உபதேசங்களை உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கவும், கிருஷ்ண பக்தியை பரப்பவும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) சுவாமி பிரபுபாதா ஏற்படுத்தினார். ஹரே கிருஷ்ணா இயக்கம் என்று பரவலாக அறியப்படும் இந்த இயக்கம், பகவத் கீதை மற்றும் பல வேத இலக்கியங்களை 89 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது. வேத இலக்கியத்தை உலகம் முழுவதும் பரப்புவதில் சிறப்பான பங்கை வகிக்கிறது. மேலும், சுவாமி பிரபுபாதா நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை நிறுவியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில், பிரபுபாதாவின் 125வது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று காணொளி காட்சி மூலமாக 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, இஸ்கான் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்