Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மறுஆய்வு செய்வேன்: மாயாவதி

ஏப்ரல் 30, 2019 12:57

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி (2 எம்.எல்.ஏ.க்கள்) காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கிறது. மாநிலத்தில் இப்போது பாராளுமன்றத் தேர்தல் நடக்கிறது. 

குனா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவரை காங்கிரஸ்தான் வலுக்கட்டாயமாக விலக செய்துள்ளது என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 

அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதில் காங்கிரஸ் பா.ஜனதாவிற்கு இணையானது. காங்கிரஸ் கட்சியால் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் வலுக்கட்டாயமாக விலக்கப்பட்டுள்ளார். 

இதற்கு காங்கிரசுக்கு சரியான பதிலடி கிடைக்கும். மாநில காங்கிரஸ் அரசுக்கான ஆதரவு தொடர்பாக மறு ஆய்வு செய்யப்படும் எனக் கூறியுள்ளார். உ.பி.யில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்