Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை அருகே ஆசிரியையிடம் 5 பவுன் செயின் பறிப்பு

செப்டம்பர் 02, 2021 05:41

தஞ்சை: தஞ்சை அருகே உள்ள கரந்தையை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 49). இவர் கரந்தையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று அதிகாலையில் வழக்கம்போல் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது செல்லியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து பைக் திருடர்களை தேடி வருகிறார்.

தலைப்புச்செய்திகள்