Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படாததால் தவிக்கும் தொழிலாளர்கள்

செப்டம்பர் 03, 2021 03:38

திருப்பூர்: கொரோனா பரவல் காரணமாக சிறப்பு ரெயில்கள் மட்டும இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் முன்பதிவு வசதியுடன் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய முடியும். தொழில்நகரமான திருப்பூர், கோவைக்குசெல்ல  பெரும்பாலான பொதுமக்கள் பாசஞ்சர் ரெயில்களை பயன்படுத்தி வந்தனர்.  கொரோனா பரவலுக்கு பிறகு இன்று வரை பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படாமல் உள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.   

இதுகுறித்து ஊத்துக்குளி ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சேலம் கோட்ட உதவி பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில், பாசஞ்சர் ரெயில் இயக்கம் இல்லாததால் திருப்பூர், கோவைக்கு மோட்டார் சைக்கிளில்  வேலைக்கு சென்று தினமும் சோர்வுடன் தொழிலாளர்கள் திரும்புகின்றனர்.

ஈரோட்டில் இருந்து ஈங்கூர், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூர், கோவை வழியாக பாலக்காடு சென்ற பாசஞ்சர் ரெயிலை நிறுத்தி 2 ஆண்டுகளாகி விட்டது. இந்த ரெயிலை மீண்டும் இயக்கினால் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறுவர். எனவே ரெயில் இயக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்றனர்.

தலைப்புச்செய்திகள்