Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

செப்டம்பர் 03, 2021 04:13

போரூர்: மேற்கு மாம்பலம் பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிலோமினாள். ரெயில்வே ஊழியர். இவர் நேற்று காலை வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் பிலோமினாளின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 3 கிராம் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டிச்சென்று விட்டனர்.

மாலையில் பிலோமினாள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது நகை-பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அசோக் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்