Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பறக்கும் பால விபத்துக்கு பின் மதுரை-நத்தம் சாலையில் மீண்டும் பணி தொடக்கம்

செப்டம்பர் 03, 2021 04:49

மதுரை: மதுரை-நத்தம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை அவுட்போஸ்ட் முதல் செட்டிகுளம் வரை மேம் பாலம் அமைக்கப்படுகிறது. நாராயணபுரம் அருகே இணைப்புப் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி ஆக.28-ல் நடந்தது. அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட கோளாறால் ஒரு கர்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி ஒருவர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.

விபத்து நடந்த இடத்தை 3 அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உட்பட பலர் பார்வையிட்டு விசாரணை மேற் கொண்டனர். விபத்துக் குறித்த முழு விவரங்களை அறிய திருச்சி என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விபத்தால் பாலப்பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட் டோருக்கு 4 நாட்களாக எந்த வேலையும் வழங்கப்படவில்லை.

சாலை அமைத்த பின்னரே பாலப்பணிகளை தொடர வேண்டும் என அமைச்சர்கள் ஆய்வின்போது தெரிவித்தனர். ஆய்வறிக்கை தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு 2 நாட்களில் அனுப்பப்பட உள் ளது. இதற்கிடையே நேற்றுமுதல் பாலத்துக்குக் கீழே சாலை அமைக்கும் பணி மட்டும் தொடங் கப்பட்டது. அய்யர்பங்களா அருகே 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இயந்திரங்கள் உதவியுடன் இப்பணிகளை மேற் கொண்டனர்.

பாலப்பணிகள் தொடங்கும் வரையில் புதிய சாலை அமைப் பது, பழைய சாலையைச் சீர் படுத்துவது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என இச்சாலையைப் பயன்படுத்தும் மக்கள் வலியுறுத்தினர்.
 

தலைப்புச்செய்திகள்