Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரக உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

செப்டம்பர் 05, 2021 01:50

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில்,  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நாளை (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பி உள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தலைப்புச்செய்திகள்