Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடுமுழுவதும் 41 மாவட்டங்களில் கொரோனா தொற்று

செப்டம்பர் 05, 2021 02:20

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி ஒரு இடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் போது 5 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு தென்பட்டால் அந்த பகுதி மோசமான பாதிப்புள்ள பகுதியாக கருதப்பட வேண்டும். தற்போது இந்தியாவில் 41 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 சதவீதத்துக்கும் மேல் இருக்கிறது. எனவே அவை மோசமான பாதிப்புள்ள மாவட்டங்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வகையில் கேரளாவில் 14 மாவட்டங்களும், மிசோரம் 10 மாவட்டங்களும், மணிப்பூரில் 6 மாவட்டங்களும், நாகாலாந்து, அருணாசல பிரதேசத்தில் தலா 3 மாவட்டங்களும், மேகாலயா, சிக்கிமில் தலா 2 மாவட்டங்களும், புதுச்சேரி, இமாசலபிரதேசம், அசாம் மாநிலங்களில் தலா 1 மாவட்டத்திலும் 5 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு உள்ளது.

கடந்த வாரம் 39 மாவட்டங்களில் தான் இவ்வாறு மோசமான பாதிப்பு இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் தான் மிக மோசமான பாதிப்பு இருக்கிறது.

அங்கு பல மாவட்டங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு உள்ளது. இதனால் அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகாவுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் மத்திய அரசு இரு மாநிலங்களையும் எச்சரிக்கிறது. மிகவும் கவனமாக இருக்கும்படியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேபோல ராஜஸ்தானில் 2 அல்லது 3 மாவட்டங்களில் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் இமாச்சலபிரதேச மாநிலத்தில் 2 மாவட்டங்களிலும், மிசோரமில் சில மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது கவலை அளிக்கும் வி‌ஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே அங்கும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்