Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்றைய 4-வது நாளில் முதல் ஒரு மணி நேர ஆட்டம் முக்கியமானது- ரோகித் சொல்கிறார்

செப்டம்பர் 05, 2021 02:22

ஓவல்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் செஞ்சுரி இதுவாகும். ரோகித் சர்மா 127 ரன்னும், புஜாரா 61 ரன்னும் , ராகுல் 46 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வீராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியா 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட் இருக்கிறது. சதம் அடித்த ரோகித் சர்மா நேற்றைய போட்டிக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்நிலை வரிசையில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக ஆடினால் தான் அணி நல்ல நிலையை அடைய முடியும். நெருக்கடியான இந்த நேரத்தில் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடக்க வரிசையில் எனது கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கருதினேன். விளையாட்டில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் எல்லா வகையிலும் மனரீதியாக தயாராக இருந்தேன்.

நாங்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கிறோம். ஆனாலும் இன்னும் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய உள்ளது. இன்றைய ஒருமணி நேர ஆட்டம் மிகவும் முக்கியமானது. நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்தால் எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

தலைப்புச்செய்திகள்