Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

செப்டம்பர் 05, 2021 02:28

உடுமலை: கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

அவ்வகையில் குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சளி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் மொத்தம் 548 மாணவர்கள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 152 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி கூறுகையில்:

அனைத்து மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். எவருக்கேனும் தொற்று அறிகுறி இருந்தால் மருத்துவமனை அல்லது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்படும். நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் என்றனர்.

தலைப்புச்செய்திகள்