Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம்

செப்டம்பர் 06, 2021 01:27

சென்னை: கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் ஊரடங்கில் சற்று தளர்வுகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. தளர்வுகள் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுணக்கம் காட்டக்கூடாது என்று அரசும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி வருகிறது. இதுதவிர கொரோனா நோய்த்தடுப்பில் தடுப்பூசி தான் முக்கிய பங்காற்றுகிறது.

அதன்படி, தற்போது எந்த பகுதிக்கு சென்றாலும் தடுப்பூசி செலுத்தி இருக்கிறீர்களா? என்ற முதல் கேள்வி எழும் நிலை வந்துவிட்டது. இந்தநிலையில் கொரோனா பாதிப்புக்கு இடையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அங்கு பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களும் பாதுகாப்பான முறையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்து பணியாற்ற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட மேலாளர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த உத்தரவு அனைத்து மாவட்டங்களில் விரைவில் பின்பற்ற அறிவுறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சான்றிதழை சுகாதாரத்துறை குழுவினர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வுக்கு வரும் போது, பணியாளர்கள் காண்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தலைப்புச்செய்திகள்