Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

செப்டம்பர் 06, 2021 01:41

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டியை சேர்ந்தவர் நதியா (வயது 32). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்தனர். அவர்கள் வீட்டில் பீரோவை திறந்து உள்ளே இருந்த 2 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை திருடினார்கள். சத்தம் கேட்டு நதியா எழுந்து பார்த்த போது திருடர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நதியா கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்