Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இருக்கைகளில் எறும்புகள் அணிவகுப்பு - பூடான் இளவரசர் செல்ல இருந்த விமானம் ரத்து

செப்டம்பர் 07, 2021 10:23

புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா (ஏ.ஐ.-111) விமானம் ஒன்று லண்டன் புறப்படத் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பூடான் இளவரசர் வர்த்தக வகுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், விமானத்தில் இருக்கைகளில் எறும்புகள் அணிவகுத்துச் சென்றுள்ளன. இதைக் கண்ட பயணிகள் இந்த விவகாரத்தை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்பின், பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு மாலை 5.22 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.
 

தலைப்புச்செய்திகள்