Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘‘பாஜகவை தோற்கடிக்கவே உ.பி. தேர்தலில் போட்டி’’ - பிரச்சாரம் செய்ய வந்த ஒவைஸி பேட்டி

செப்டம்பர் 07, 2021 04:17

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம், அதற்காகவே உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைஸி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியும் போட்டியிடுகிறது. இக்கட்சித் தலைவர் ஒவைஸி, அயோத்தியில் இன்று பிரச்சாரத்தை தொடங்கி உ.பி.யின் கிழக்குப் பகுதி முழுவதும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

அயோத்தியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ருடவுலி தொகுதியில் ஒவைஸியின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது, இது ராமஜென்ம பூமியில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான கூட்டத்துக்கு ஒவைஸி கட்சியினர் ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், ஒவைஸியின் பிரச்சார முடிவுக்கு அயோத்தியை சேர்ந்த சாதுக்களும், முடித்து வைக்கப்பட்ட பாபர் மசூதி வழக்கின் மனுதாரரான இக்பால் அன்சாரியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் லக்னோ வந்த ஒவைஸிக்கு அவரது கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். அதற்காக உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உத்தரபிரதேச முஸ்லிம்களின் வெற்றிக்கு எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். உ.பி.யில் புதிய அத்தியாயம் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்