Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

செப்டம்பர் 08, 2021 01:07

மேட்டூர்: கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து மொத்தம் 16 ஆயிரத்து 359 கன அடி உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன், மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லில் தற்போது 16 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 17 ஆயிரத்து 712 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று விநாடிக்கு 15 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 650 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 73.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 74.71 அடி ஆனது.

தலைப்புச்செய்திகள்