Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழை குடும்பத்தில் இருந்து வந்து 20 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி

செப்டம்பர் 08, 2021 01:08

மைசூரு: மைசூரு பல்கலைக்கழக 101-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, அந்த பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சைத்ரா நாராயண் என்ற மாணவி, பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று 20 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்த சைத்ரா நாராயண், உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அவருடைய கிராமத்துக்கு காலை ஒன்றும், மாலை ஒன்றுமாக மொத்தமே 2 பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. அந்த பஸ்சில் தான் சைத்ரா நாராயண் சிர்சிக்கு வந்து பி.யூ.சி. படித்தார்.

பின்னர் அவர் மைசூரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வேதியியல் பாடப்பிரிவில் இளங்கலையும், முதுகலையும் படித்தார். முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லாத குக்கிராமத்தில் இருந்து வந்து, சைத்ரா நாராயண் 20 தங்கப்பதக்கங்களை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்