Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தோனியின் பெயரைச் சொன்னவுடனே எல்லோரும் ஒரே பதில்தான்: ஜெய் ஷா விளக்கம்

செப்டம்பர் 09, 2021 01:37

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி நியமிக்ககப்பட்டது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கின்றன. இதற்கான 15பேர் கொண்ட இந்திய அணியை அனைத்து இந்திய சீனியர் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது.

இதில் 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் அணிக்குள் வந்துள்ளார். இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக அஸ்வின் விளையாடினார் அதன்பின் 4 ஆண்டுகள் இடைவெளியில் உலகக் கோப்பைப் போட்டிக்கு தேர் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில் “ எம்எஸ் தோனியைப் பொறுத்தவரை, நான் துபாயில் இருந்தபோது, இந்திய அணியின் ஆலோசகராக வருமாறு தோனியிடம் நான் பேசினேன். தோனியும் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால்,டி20 உலகக் கோப்பைக்கு மட்டுமே இந்த பணி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நான் பிசிசிஐ அமைப்பின் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கேப்டன் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, அணி வீரர்கள், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்டேன். தோனியின் பெயரைச் சொன்னவுடனே அனைவரும் சம்மதம் என ஒரே பதிலைத் தெரிவித்தனர். இதனால்தான் விரைவாக முடிவுக்கு வர முடிந்தது” எனத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்