Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் தேர்தல் விதிகளை மீறவில்லை: தேர்தல் கமிஷன்

மே 01, 2019 06:17

புதுடெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சோதனையில் ஏப்.,30 வரை நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.3278.22 கோடி மதிப்பிலான பணம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.787.18 கோடி பணம், ரூ.249.82 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.1215.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.972.378 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூ.53.338 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பானி புயல் காரணமாக புரி, ஜகத்சிங்புர், கேந்திரபாரா, கட்டாக், ஜெய்பூர், கஜபதி உள்ளிட்ட பகுதிகளில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அந்த பகுதிகளில் புயல் நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள எந்த தடையும் இல்லை.

காஷ்மீர் சட்டசபை தேர்தல் விவகாரம் தொடர்பாக ஏப்ரல்  மாதம் நடந்த தேர்தல் கமிஷன் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் விளக்கத்தை பொறுத்து அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளதால் அங்கு தேர்தல் நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மீது தேர்தல் விதிகளை மீறியதாக பல புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாக தேர்தல் கமிஷன் இதுவரை அமைதி காத்துவந்தது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக பிரதமர் மீதான புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. அதில், பிரதமரின் பேச்சு குறித்து, தேர்தல் நடத்தை விதிகளின்படி ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிகளை மீறும் வகையில் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்