Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாகும் வரை போராடுவேன் என்றே அஷ்ரஃப் கனி கூறினார்: இணையத்தில் வைரலாகும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் பேட்டி

செப்டம்பர் 09, 2021 01:45

தான் நாட்டை விட்டு வெளியேறிய சூழல் குறித்து ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி நீண்ட விளக்கம் அளித்துள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை இறுதி மூச்சு வரை போராடவே விரும்பியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுப்பியது. அஷ்ரஃப் கனி துரோகம் இழைத்துவிட்டதாக அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், டோலோ நியூஸ் செய்தியாளர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளின்கனுடன் காணொலி வாயிலாக நேர்காணல் நடத்தியுள்ளார். இந்த நேர்காணலில் செய்தியாளர் பிளின்கனிடம், அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு பத்திரமாக வெளியேற உதவினீர்களா? என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு பிளின்கன், அதிபர் கானி நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் என்னிடம் பேசினார். அப்போது அவர் சாகும்வரை போராடத் தயாராக இருப்பதாகக் கூறினார் என்று பதிலளித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்தக் கேள்வி, பதில் அடங்கிய சிறு வீடியோவை டோலோ நியூஸ் செய்தி நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்புச்செய்திகள்