Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

20 ஓவர் உலக கோப்பை - டோனியை ஆலோசகராக நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த கபில்தேவ்

செப்டம்பர் 11, 2021 06:29

புதுடெல்லி: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டோனி தலைமையில் இந்திய அணி 2 உலக கோப்பையையும் மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இதனால் அவர் அணிக்கு ஆலோசகராக இருப்பது நல்ல பலனை அளிக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும், கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதை கபில்தேவ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இது ஒரு நல்ல முடிவு. டோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று ஒரு ஆண்டுதான் ஆகிறது. சிறப்பு நிகழ்வாக உலக கோப்பையில் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டது மிக முக்கியமானதாகும். பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்று 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இதுபோன்ற வாய்ப்பை பெற முடியும்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்