Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்

செப்டம்பர் 12, 2021 10:53

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 40 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்