Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கே.சி.வீரமணி வீட்டில் 9 சொகுசு கார்கள், அமெரிக்க டாலர்

செப்டம்பர் 17, 2021 09:44

வேலூர்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல், சொகுசு விடுதி, கல்வி நிறுவனம், உறவினர் வீடு, சென்னையில் உள்ள வீடு உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று காலை 6.30 மணி முதல் இரவு 11.20 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.
 
இதில் ஜோலார்பேட்டை இடையம்பட்டி காந்தி ரோட்டில் உள்ள கே.சி.வீரமணி வீடு தவிர மற்ற இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இரவு 7 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக முடிவுக்கு வந்தது. மொத்தம் 17 மணி நேரம் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் ரொக்கமாக 34 லட்சத்து 1,060 ரூபாய், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள், ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர்கள், ஹார்டு டிஸ்க்குகள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 623 பவுன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப்பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர்.

இது தவிர கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள சுமார் 275 யூனிட் மணல் கைப்பற்றப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்