Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

செப்டம்பர் 18, 2021 04:30

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டும், கோரோனோ கோரப் பிடியிலிருந்து மீண்டு வந்த மக்கள் இன்புற்று நலமுடன் வாழ 108 குத்துவிளக்கு பூஜை மற்றும் 1008 மரக்கன்றுகளை பாரத ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் பொன்.ருத்தரகுமார் தலைமையில், வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றன. 

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வரிசையாக அமர்ந்து குத்துவிளக்கினை ஏற்றி கொரோனா கோரப் பிடியில் இருந்து மீண்ட மக்களுக்கு நலமுடன் வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சியினை முடிந்து அனைவருக்கும் 1008 மரக்கன்றுகளை வழங்கபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கார்வேந்தன்,மாநில விவசாய அணி பொருளாளர் பார்த்தசாரதி, மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜு, மாவட்டத் துணைத் தலைவர் மங்கலம் ரவி, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்