Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளஸ்-2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

செப்டம்பர் 21, 2021 02:17

உடுமலை; கடந்த கல்வியாண்டின் பிளஸ்-2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  மாணவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து  நீட், பொறியியல் போன்ற மேல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர். பல கல்லூரிகளில் இந்த தற்காலிக மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையும் நடந்து முடிந்து உள்ளது.
 
தற்போது பள்ளிக் கல்வித்துறையால் பிளஸ்-2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் இச்சான்றிதழ் வழங்கப்பட்டும் வருகிறது. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று சான்றிதழ்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 

குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் பழனிசாமி தலைமையில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில்: மாணவர்களில், பிளஸ் 2 கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யும் பணிகளும் அந்தந்த பள்ளிகளில் நடந்து வருகிறது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் அந்த ஆவணங்களை பயன்படுத்தி பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்து வருகின்றனர் என்றனர்.

தலைப்புச்செய்திகள்