Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனது மனைவி நிம்மதியாக தூங்க புதிய கருவி கண்டுபிடிப்பு : மார்க் ஜூக்கர்பெர்க்

மே 01, 2019 06:42

சான்பிரான்சிஸ்கோ: இளைஞர்கள் பேஸ்புக்கை அளவான முறையில் பயன்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையின் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவி நிம்மதியாக தூங்க பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது மனைவி பிரிசில்லா, இரவில் தூக்கத்தின் இடையில் திடீரென எழுந்து நேரத்தை பார்ப்பது, அதனால் தூக்கம் கெடுவது போன்ற சின்ன சின்ன சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி மனைவியை நிம்மதியாக தூங்க வைக்க ஏதுவாக இந்த பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டியை அவர் வடிவமைத்துள்ளார். 

இந்த ஒளிரும் மரப்பெட்டி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மிக மங்கலான ஒளியை வீசும். இந்த நேரமானது, அவர்களின் 2 பெண் குழந்தைகளும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நேரம். இதன்மூலம் அலார ஓசைக்காக காத்திருக்காமல் அந்த மங்கலான ஒளிக்கு பின் பிரிசில்லா பதற்றம் இன்றி நிம்மதியாக எழ முடியும்.

இந்த ஒளிரும் மரப்பெட்டி தான் நினைத்ததை விட சிறப்பாக செயல்படுவதாகவும், தன் நண்பர்கள் வட்டாரத்தில் அது பிரபலமாகி வருவதாகவும் கூறிய மார்க் ஜூக்கர்பெர்க், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அதனை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்