Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒடிசாவை நோக்கி நகர்கிறது பானி புயல்: 11 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு

மே 01, 2019 06:47

புதுடெல்லி: பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கி உள்ளது. இதையடுத்து, ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒடிசாவின் கடலோரங்களில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

பானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பானி புயல் ஒடிசா கரையை கடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பானி புயலை எதிர்கொள்வதற்காக,  தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதி பானி புயல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்