Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வேலையில்லா தலைவர்களாக நீடிப்பார்கள்: பாஜக விமர்சனம்

செப்டம்பர் 27, 2021 09:59

பெங்களூரு: கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கலபுரகி, பெலகாவி, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவான முடிவு வந்துள்ளது. அதனால் முன்வரும் நாட்களிலும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், தொடர்ந்து வேலையில்லா தலைவர்களாக நீடிப்பார்கள்.

இந்த இரு தலைவர்களும் கடைசி வரை அதிகாரம் கிடைக்காமல் குதிரை வண்டியில் தான் நடமாட வேண்டும். கர்நாடகத்தில் நடைபெற உள்ள மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் தோற்கடித்து காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்குவோம்.

இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்