Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிழக்கிந்திய கம்பெனி போல மதம் மாற்றுவதுதான் அமேசானின் நோக்கம்: ஆர்எஸ்எஸ் பத்திரிகையில் தகவல்

செப்டம்பர் 28, 2021 10:11

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையான `பாஞ்சன்யா’, சில வாரங்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தை வெளிநாட்டு உளவு நிறுவனம் என விமர்சித்து கட்டுரைஎழுதி இருந்தது.

இந்நிலையில், `கிழக்கிந்திய கம்பெனி 2.0’ என்று தலைப்பிட்டு பாஞ்சன்யா இதழின் ஆசிரியர் குழு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அமேசானின் திட்டம் என்றும் அதற்காக முதலில் அரசியல், பொருளாதார ரீதியாக உள்ளே நுழைந்து பின்னர் தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் செயலில் அது ஈடுபட்டுள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலியான பெயர்களில்இணையதள நிறுவனங்களைஉருவாக்கி, அரசியல்வாதி களுக்கு லஞ்சம் வழங்கி தங்களுக்கு தோதான வகையில் கொள்கைகளை உருவாக்க வழி செய்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி முதலில் இந்திய கலாச்சாரத்தை சிதைத்து, பின்னர் மக்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைத்தான் இப்போது அமேசான் மேற்கொண்டு வருகிறது. தனது ஓடிடி தளமான பிரைம் வீடியோவில் தாண்டவ், பாதல் லோக் உள்ளிட்ட வீடியோ தொடர்களை வெளியிடுகிறது.

இவை அனைத்தும் இந்து விரோத கொள்கைகளைக் கொண்டவை. அமேசானின் பிரதான நோக்கமே கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதுதான். இதற்காக2 தன்னார்வ அமைப்புகளுக்குஅது நிதி உதவி அளித்துள்ளது என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்