Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீர் சுரங்கப்பாதையில் நிதின் கட்காரி ஆய்வு

செப்டம்பர் 29, 2021 09:58

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையில் ககங்கிர்-சோன்மார்க் இடையே இசட்-மோர் என்ற சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில், 6½ கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டு வருகிறது. இது, இருவழிப்பாதை கொண்ட சுரங்கப்பாதை. அவசர வழியும் உள்ளது. அனைத்து வானிலைகளையும் தாங்கக்கூடியது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கும், லடாக்கில் உள்ள கார்கிலுக்கும் இணைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று நேரில் ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஷ்மீரில் 20 சுரங்கப்பாதைகளும், லடாக்கில் 11 சுரங்கப்பாதைகளும் மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் சுற்றுலா பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்