Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- அ.தி.மு.க.வை எதிர்த்து பா.ஜனதா போட்டி

செப்டம்பர் 29, 2021 10:00

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 180 யூனியன் வார்டு கவுன்சிலர்கள், 412 பஞ்சாயத்து தலைவர் பதவி, 3,162 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஏற்கனவே வார்டுகள் பிரிக்கப்பட்டு அவர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜனதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாக களம் காண்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி 19-ல் 8 வார்டுகளில் பா.ஜனதா, அ.தி.மு.க.வை எதிர்த்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. 17 வார்டுகளில் தனியாக களம் காண்கிறது. 2 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வாகி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 180 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 757 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் 170 பேர் யூனியன் கவுன்சிலருக்கு களத்தில் உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து 35 வார்டுகளில் பா.ஜனதா போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு 6 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 1 வார்டிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. மீதம் உள்ள 167 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

தேர்தல் நாட்கள் நெருங்குவதால் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்