Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினசரி வருவாய் ரூ. 1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி

அக்டோபர் 01, 2021 10:25

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி முதல் இடம் வகிக்கும் நிலையில், கவுதம் அதானி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ள நிலையில், அதானி குழுமத்தின் கவுதம் அம்பானி 2-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்த உயர்வுக்கு காரணம் அவரது சொத்து மதிப்பு 1,40,200 கோடி ரூபாயில் இருந்து 5,05,900 கோடி ரூபாயாக உயர்ந்ததுதான். இது ஏறக்குறைய நான்கு மடங்கு அதிகமாகும். கவுதம் அதானியின் தினசரி வருவாய் 1002 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் சீனாவின் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் ஜோங் ஷன்ஷானை முந்தியுள்ளார்.

ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7,18,000 கோடி ரூபாயாகும். கவுதம் அதானியின் சகோதரர் வினோத் ஷாந்திலால் அதானி 1,31,600 கோடி ரூபாய் உடன் 8-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் 2,36,600 கோடி ரூபாய் உடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஹெச்.பி. இந்துஜா 2,20,000 கோடி ரூபாய் உடன் 4-வது இடத்தில் உள்ளார். சைரஸ் எஸ். பூனவல்லா 1,74,400 கோடியுடன் 6-வது இடத்தில் உள்ளார். இந்தத் தகவலை ஐ.ஐ.எஃப்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்