Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: இந்தியா பரஸ்பர நடவடிக்கை எனத் தகவல்

அக்டோபர் 02, 2021 10:45

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் இங்கிலாந்து முடிவுக்கு, இந்திய அரசு பரஸ்பர நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு நபர்கள் இங்கிலாந்து வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் தொழில் அதிபர்கள், மாணவர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு பலமுறை இங்கிலாந்திடம் பேசி பார்த்தது. ஆனால், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவுக்கு வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரஸ்பர நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 4-ந்தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்