Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தாண்டு முதல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை - டாக்டர்கள் மகிழ்ச்சி

அக்டோபர் 02, 2021 11:13

திருப்பூர்: திருப்பூரில் 11.28 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசு நிதி, ரூ.193 கோடி, மாநில அரசு நிதி ரூ. 147 கோடி என மொத்தம் ரூ.340 கோடியில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணி நடந்து வருகிறது. தற்போது 100 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கூறுகையில்:

கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட தேசிய குழுவினர் டெல்லி மருத்துவ கவுன்சிலில் விரிவான அறிக்கை சமர்பித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் நான்கு மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் திருப்பூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது.  2021-22 கல்வியாண்டிலேயே அட்மிஷன் தொடங்க முன்னேற்பாடாக ஒப்புதல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்