Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 440 கனஅடியாக அதிகரிப்பு

அக்டோபர் 02, 2021 04:51

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று காலை 9 ஆயிரத்து 18 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 10 ஆயிரத்து 440 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரியில் நேற்று வரை 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் தண்ணீர் திறப்பு 800 கன அடியில் இருந்து 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை விட அணைக்கு கூடுதல் தண்ணீர் வருவதால் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 72.68 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 73.86 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
 

தலைப்புச்செய்திகள்