Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தி

அக்டோபர் 02, 2021 04:54

தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் ‘தேசத்தந்தை’ மகாத்மா காந்தி இன்றளவும் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கிறார். உலகத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் இந்தியர் காந்தியடிகள். அவரது அகிம்சை மார்க்கம் உலக அளவில் புகழ்பெற்றதாகும். இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதை விட்டு மறையாத இந்தியாவின் ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தியடிகளைப் பற்றி சில தகவல்கள்...

• இந்தியாவின் குஜராத் மாநிலம், “போர்பந்தர்” என்ற இடத்தில் 1869-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்தார்.

• பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கிய இவர், இங்கிலாந்தில் தனது 18-வது வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் படிப்பை படித்து, சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

• தென் ஆப்பிரிக்காவில் நீதிமன்றத்தில் நடந்த ஓர் வழக்கில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் ரெயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் அதிருப்தியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

• இந்தியா திரும்பிய காந்தியடிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களை வீறுகொள்ளச் செய்தார்.

• ரவுலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்க காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை 1922-ம் ஆண்டு தொடங்கினார்.

• பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்ததை ஏற்க மறுத்த காந்தி சத்தியாகிரக முறையில் இதை எதிர்த்து 1930-ம் ஆண்டு அகமதாபாத்திலிருந்து தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.

• ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்த நிகழ்வு அவரின் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

• 1942-ம் ஆண்டு ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்டு புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தை தொடங்கினார்.

• மகாத்மா காந்தி பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில் இந்திய அரசினால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந் தேதி ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாட்டு சபை “சர்வதேச அகிம்சை” தினமாகவும் அறிவித்தது. அவர், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, தேசத்தந்தை, மகாத்மா, அகிம்சா மூர்த்தி என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார்.

• அவருடைய தனித்துவமான கொள்கைகளால் உலகளவில் அவர் இன்றளவும் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்கிறார்.
 

தலைப்புச்செய்திகள்