Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4ந்தேதி முதல் 10-ம்வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

அக்டோபர் 02, 2021 04:57

உடுமலை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதேநேரம் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என, மேல்படிப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அவ்வகையில் அந்தந்த பள்ளிகளின் இணையதள முகவரி வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு  மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.  இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

உடுமலை கல்வி மாவட்டத்தில் 57 பள்ளிகள் வாயிலாக 4,838 மாணவ, மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அந்தந்த பள்ளிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, வரும் 4-ந்தேதி முதல் மாணவர்களிடம் நேரடியாக சான்றிதழ்கள் அளிக்கப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

தலைப்புச்செய்திகள்