Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாதிகள் பலவீனமான அரசுக்காக காத்திருக்கிறார்கள்: பிரதமர் மோடி

மே 01, 2019 10:39

நரேந்திர மோடி பிரதமாரக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அயோத்யா நகருக்கு இன்று நடைபெற இருக்கும் பேரணியில் கலந்துகொள்ள இருக்கிறார். அயோத்யாவிலிருந்து 25 கிமீ தொலைவில் இருக்கும் மாயாபஜார் என்னும் பகுதியில் தொடங்கி அம்பேத்கர் நகர் வரை பேரணி நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 5-வது கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி அங்கு தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று நடைபெற்ற பேரணிக்கு பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, ஒருவார்த்தை கூட ராமர் கோவில் கட்டுவது குறித்தும், ராமர் கோவிலுக்கு வந்து ராமரை வழிப்படவில்லை என்று பலர் மோடியை விமர்சித்து வருகின்றனர். அப்போது பேசிய மோடி, “தேசத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த புதிய இந்தியாவில்  பயங்கரவாதிகளுக்கு வலிமையான செய்தியை கூறி வருகிறோம். பயங்கரவாதிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்திவிட்டோம், ஆனால், பயங்கரவாதிகளை ஒழிக்கவில்லை. பலவீனமான அரசு எப்போது அமையும் என்பதற்காக பயங்கரவாதிகள் காத்திருக்கிறார்கள். 

அவ்வாறு வந்துவிட்டால் மீண்டும் நாட்டைத் தாக்குவார்கள். எதிர்க்கட்சிகளின் ஊழல், கலப்படக் கூட்டணிக்கு வாக்களிக்கும் போது மக்கள் எச்சரிக்கையுடன், சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார். “அம்பேத்கரை பின்பற்றுகிறோம் என்று சொல்லும் மாயாவதி, அம்பேத்கர் கொள்கைகளை அழித்துவிட்டார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்