Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்: பிரியங்கா

மே 01, 2019 11:00

அமேதி: அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வரும்  பிரியங்கா காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பிரியங்கா காந்தியின் கார் வந்ததும் ஓடிச்சென்று கதவை திறந்து அவரை வரவேற்ற தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர். 

தொடர்ந்து உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தியுடன் தொண்டர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது.

நாங்கள் பலவீனமாக உள்ள நிலையில், பா.ஜ.க. வாக்கைக் குறைக்க வேட்பாளர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம் . உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும். காங்கிரஸ் வேட்பாளர்கள் பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறார்கள் என கூறினார்.

தலைப்புச்செய்திகள்