Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களின் பாதுகாப்புக்காக, 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் one-stop centres அமைப்பு : பிரதமர் மோடி பேச்சு

அக்டோபர் 12, 2021 03:05

டெல்லி :

மனித உரிமையை காப்பதில் உலகத்திற்கே இந்தியா வழிகாட்டியாக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன தினத்தை ஒட்டி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி,

உலகளவில் மனித உரிமைகள் பாதுகாப்பின் முகமாக தேச தந்தை மகாத்மா காந்தி விளங்குவதாக தெரிவித்தார். முதல் உலக போரில் பெரும்பாலான நாடுகள் மனித உரிமைகளை மீறிய போதும், இந்தியா மனித உரிமைகள் பாதுகாப்பு மீது மிகுந்த அக்கறை கொண்டு இருந்ததாக தெரிவித்தார்.

அசாதாரண சூழ்நிலைகளின் போதும் அமைதியான வழியில் பயணித்து உலகிற்கே இந்தியா முன்னுதாரணமாக விளங்கியதாக கூறிய அவர், பெண்களின் பாதுகாப்புக்காக, 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மருத்துவம்,

காவல்துறை, மனநல ஆலோசனை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றை வழங்குவதற்காக one-stop centres அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நமது அரசியலைப்பு சட்டம் சமத்துவம் வாய்ந்த சமுதாயத்திற்கு வழிவகை செய்து இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் குமார் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

அதே ஆண்டு அக். 12ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது. மனித உரிமைகள் எந்த வகையில், மீறப்பட்டாலும் அதனை குற்றமாக எடுத்துக் கொண்டு இந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

தலைப்புச்செய்திகள்