Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய கால கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

அக்டோபர் 12, 2021 04:13

சென்னை:

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு சம்பா பருவ சாகுபடியின் போது நிவர், புரெவி ஆகிய புயல்களால் கனமழை, காற்று ஆகியவற்றால் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டது.

புயல் பாதித்த பகுதி வாழ் விவசாயிகள் அனைவருக்கும் காப்பீடு திட்டப்படி இழப்பீட்டுத்தொகை இன்னும் வழங்கப்படாததாலும் பயிர் கடன் சரிவர கிடைக்காததாலும் விவசாயிகள் தற்போதைய சாகுபடிப் பணிகளில் ஈடுபட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

நடப்பாண்டு சாகுபடி பணிகளை செய்வதற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடனை உடனே வழங்க வேண்டும்.

நிலுவையில் உள்ள மத்திய காலகடனை விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத்தொகை, பசலி வருவாய் அடங்கல் ஆவணம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன், பதிவு செய்யப்பட்ட பரிவர்த்தனை சொத்துக்களை பட்டா மாற்றுதல் உள்ளிட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்